Translate

Thursday, 13 September 2012

இரா.சம்பந்தன் - ரொபர்ட் ஓ பிளேக் கொழும்பில் இன்று சந்திப்பு!


தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட்  ஓ பிளேக்கை கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.


இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் கலந்துகொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணை அமுலாக்கம் குறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை ரொபர்ட் ஓ பிளேக் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடனும் கலந்துரையாடியுள்ளார்.

No comments:

Post a Comment