Translate

Monday, 10 September 2012

'மின் துண்டிக்கப்பட்டதில்' ஒரு தொகுதியை இழந்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு!


மட்டக்களப்பு மாவட்டம் வின்சென்ட் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற அம்மாவட்டத்திற்கான வாக்களிப்புகளில் ஏழு தொகுதிகளை கொண்டு முன்னணியில் திகழ்ந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி. ஆனால், திடீரென மின் துண்டிக்கப்பட்ட சூழ்ச்சியினை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ஆறு தொகுதிகளையே வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் 'காணாமல்போன' அத்தொகுதி, ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சிக்கு சொந்தமாகியுள்ளது.
 
முடிவில், 12 தொகுதிகளைக்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி தேர்தலில் முன்னிலையிலும் 11 தொகுதிகளை வென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாம் நிலையிலும் உள்ளது. இதனை தொடர்ந்து, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஏழு தொகுதிகளையும் ஐக்கிய தேசிய கட்சி நான்கு தொகுதிகளையும் விமல் வீரவன்சாவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி ஒரு தொகுதியையும் வென்றுள்ளன.
 
வழக்கமாக, மட்டக்களப்பு இந்து கல்லூரியில் நடைபெறும் வாக்குகள் கணக்கெடுப்பு இம்முறை துணை இராணுவ முகாம் அருகில் செயல்பட்டுவரும் வின்சென்ட் கல்லூரிக்கு மாற்றலாகியுள்ளது.
 
தேர்தலின் முடிவில் முதன்மை கட்சிகள் வென்ற வாக்குகள் எண்ணிக்கை கீழ்கண்டவாரு:-
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி                  200 044 வாக்குகள்
  • தமிழ் தேசிய கூட்டமைப்பு                      193 827 வாக்குகள்
  • இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி  132 917 வாக்குகள்
  • ஐக்கிய தேசிய கட்சி                                    74 901 வாக்குகள்
மாவட்ட வாரியான முடிவுகள் பின்கண்டவாரு:-
  • திரிகோணமலை மாவட்டத்தில்:
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் 44 396 (29.08%) வாக்குகள் பெற்று 3 தொகுதிகளை வென்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் 43 324 (28.38%) வாக்குகள் பெற்று 3 தொகுதிகளை வென்றுள்ளனர்.
இலங்கை முஸ்லீம் கட்சியினர் 26 176 (17.15%) வாக்குகள் பெற்று 2 தொகுதிகளை வென்றுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி 24 439 (16.01%) வாக்குகள் பெற்று 1 தொகுதியை வென்றுள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணி 9 522 (6.24%) வாக்குகள் பெற்று 1 தொகுதியை வென்றுள்ளனர்.
  • மட்டக்களப்பு மாவட்டத்தில்:
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் 104 682 (50.83%) வாக்குகள் பெற்று 6 தொகுதிகளை வென்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் 64 190 (31.17%) வாக்குகள் பெற்று 4 தொகுதிகளை வென்றுள்ளனர்.
இலங்கை முஸ்லீம் கட்சியினர் 23 083 (11.21%) வாக்குகள் பெற்று 1 தொகுதியை வென்றுள்ளனர்.
  • அம்பாரை மாவட்டத்தில்:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் 92 530 (33.66%) வாக்குகள் பெற்று 5 தொகுதிகளை வென்றுள்ளனர்.
இலங்கை முஸ்லீம் கட்சியினர் 83 658 (30.43%) வாக்குகள் பெற்று 4 தொகுதியை வென்றுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி 48 028 (17.47%) வாக்குகள் பெற்று 3 தொகுதியை வென்றுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் 44 749 (16.28%) வாக்குகள் பெற்று 2 தொகுதிகளை வென்றுள்ளனர்.
http://www.pathivu.com/news/21963/57/d,article_full.aspx

No comments:

Post a Comment