Translate

Monday, 10 September 2012

சிறிலங்காவின் அறிவுறுத்தலையும் மீறி தமிழகத்திற்கு செல்லும் சிறிலங்கா யாத்திரிகர்கள்: த ஹிந்து


தமிழகத்திற்கு பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை பிரஜைகளுக்கு  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளபோதும் அங்கு செல்லும் இலங்கை யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழகத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கை பிரஜைகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இந்த அறிவித்தலை அடுத்தும் தமிழகத்திற்கு செல்லும் இலங்கை யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் வீழச்சி ஏற்படவில்லை என சென்னையிலுள்ள மகாபோதி நிலையத்தின் தேரர் ஒருவரை மேற்கோள்காட்டி த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை சுமார் ஆயிரத்து 200 இலங்கை யாத்திரிகர்கள் சென்னையிலுள்ள மகாபோதி நிலையத்திற்கு சென்றிருந்ததாக கலவானே மகாநாம தேரர்த ஹிந்து பத்திரிகைகு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment