நடைபெற்றுமுடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேர்தல் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களின்
வாக்குச் சாவடிகள் பலவற்றிற்கு சென்று வந்தேன். ஒரு சில இடங்களில் சிறு அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றாலும் கூட மக்கள் சுயமாக வாக்களிக்கின்ற நிலைமை காணப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே தேர்தல் து~;பிரயோகங்களில் ஈபடக்கூடிய நிலைமை காணப்பட்டது. இது குறித்து தேர்தல் கண்கானிப்பு நிலையத்துக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அறியப்படுத்தினோம்" என்றார்.
No comments:
Post a Comment