Translate

Monday 26 November 2012

த.தே.கூடன் அமெரிக்கா பேசுவதற்கு திட்டம்


தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை ஒன்றினை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடாத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகளுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த ஆண்டில் ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தினால் எந்தளவிற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே அமெரிக்கா த.தே.கூவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவியவருகின்றது.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது அமெரிக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை நிறைவேற்றியிருந்தன.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்படட்மை தொடர்பில் விசாரணை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் அமுல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கூறப்பட்டிருந்தது.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ. நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரின் போது இலங்கை விவகாரம் குறித்த அறிக்கை ஒன்றை, ஐ. நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் கூட்டமைப்பு பிரதிதிகள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment