விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமது நாட்டுக்கு அழைத்துச் சென்று அடைக்கலத்தஞ்சம் வழங்கவே நோர்வே விரும்பியது என சிறீலங்காவைச் சேர்ந்த தேசிய நாட்டுப்பற்றாளர் அமைப்பின் தலைவர் குணதாசா அமரசேகரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 12 பேருக்கு நோர்வே தூதரகம் அடைக்கலம் வழங்கியுள்ளது என்பது ஆச்சரியமானது அல்ல ஏனெனில் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் விடுதலைப்புலிகளின் அலுவலகம் போலவே போர் நடைபெற்ற காலத்தில் செயற்பட்டுவந்தது.
போரின் போது அது விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்திருந்தது. அமைதி முயற்சிகளின் அனுசரணையாளர்கள் போல நோர்வே செயற்பட்டாலும், அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தமது நாட்டுக்கு அழைத்துச் சென்று அடைக்கலத் தஞ்சம் வழங்கவே நோர்வே விரும்பியது. ஆனால் தற்போது விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அது பாதுகாத்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment