Translate

Tuesday, 28 June 2011

சேனல் 4 க்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்கு

சேனல் 4 க்கு எதிராக 
புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்கு 


100 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கோரி சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்கு தொடர உள்ளன. 

நேரில் பார்த்த சாட்சிகள் யாருமின்றி, சேனல்4 தொலைக்காட்சியானது போர்க்குற்றங்கள் தொடர்பான போலிக் காணொளிகளை வெளியிட்டு, இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்படவுள்ளது. 

ஆஸ்ட்ரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் ஒன்றிணைந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளன. 



அதன் பிரதிவாதிகளாக சேனல்4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் காணொளியின் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

சேனல்4 தொலைக்காட்சி சேவையானது போலியான காணொளியொன்றை ஒளிபரப்பியதாகவும், அவர்களுடைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரடி சாட்சிகள் யாரும் இல்லையென்றும்,விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மறைக்கத் துணை புரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

No comments:

Post a Comment