பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் அரசியல் தீர்வுக்கு தான் பூரண ஆதரவளிப்பேன் என மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுடனான சந்திப்பொன்றின்போது, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா? இல்லையா என்பதை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே தீர்மானிக்குமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment