சம்பந்தம் -கொலையுண்டவரின் தந்தை சந்தேகம் :
கொலை செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் புத்தூர் வாரவத்தை பிரதேசத்தில் கால்பந்தாட்ட மைதானத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பாலச்சந்திரன் சற்குணராஜாவின் கொலையுடன் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவரும், இராணுவத்தினரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கொலையுண்டவரின் தந்தை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சற்குணராஜா முஸ்லிம் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். குறித்த முஸ்லிம் பெண்ணின் உறவினர் ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
உடனடியாக இந்த காதல் சம்மந்தத்தை முறித்து கொள்ள வேண்டும் என அந்த அதிகாரி சற்குணராஜா மற்றும் அவரது தந்தை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனை அடுத்து இது பற்றி , தந்தை இராணுவ முகாம் ஒன்றில் முறைப்பாடு செய்துள்ளார். இராணுவம் அழைத்திருந்தன் பேரில் சற்குணராஜா இராணுவ முகாமிற்கு சென்றிருந்தார்.
அங்கிருந்த அதிகாரிகள், முஸ்லிம் பெண்ணின் உறவினரான புலனாய்வு பிரிவின் அதிகாரியின் ஆலோசனையின் படி காதல் தொடர்புகளை துண்டித்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். இந்த விசாரணையின் பின்னர், சற்குணராஜா இராணுவ முகாமில் இருந்து வெளியேறிச் சென்றதாகவும் பின்னர், அவர் மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனின் மரணத்துடன் புலனாய்வு பிரிவின் அதிகாரியும் இராணுவம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக சற்குணராஜாவின் தந்தை காவற்துறையில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
புத்தூரில் பொது மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு :
26-06-2011 - 5:29
வலிகாமத்தின் புத்தூர் கிழக்குப் பகுதியில் பொது மைதானம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மயிலிட்டியைச் சொந்த இடமாகக் கொண்டவரும் அச்சுவேலி தோப்பு பகுதியில் இடம்பெயர்ந்து வசித்து வந்தவருமான 30 வயதுடைய பாலச்சந்திரன் சற்குருநாதன் என்பவரே இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் மற்றும் உடமைகள் அருகில் காணப்பட்டுள்ளன குளோபல் தமிழ்ச்செய்தியாளர் என தெரிவித்துள்ளார்.
இவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என சந்தேசிக்கப்படுகின்றது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இவர் இதே பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டிருந்தார். இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட பின்னர் இவர் பலத்த சிரமங்களி;ன் மத்தியில் தப்பிச் சென்று கொழும்பில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்ததாக தெரிய வருகின்றது.
அண்மையிலேயே யாழ்ப்பாணம் திரும்பியிருந்த இவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். நேற்றிரவு இப்பகுதியில் நீண்ட நேரம் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்ததாகவும் சர்ச்சைக்குரிய வகையில் மோட்டார் சைக்கிள்கள் ஓடித் திரிந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சடலம் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment