இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கது – சரத்குமார்
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நோக்கில் தமிழக சட்ட மன்றில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படக் கலைஞர் பேரவை உறுப்பினர்கள், முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்க சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சரத் குமார் தென் இந்திய திரைப்படக் கலைஞர் பேரவையின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
கச்சத்தீவை மீளவும் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக தடை விதிக்கக் கொரியமை மற்றும் கச்சத்தீவை மீட்பதாக அறிவித்தமை ஆகியவற்றுக்காக முதல்வருக்கு நன்றி பாராட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் பாரிய பேரணி ஒன்றை சென்னையில் அல்லது டெல்லியில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் முதல்வருக்கு அறிவித்ததாகவும் அதற்கு அவர் இணக்கம் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment