Translate

Tuesday, 28 June 2011

பெருந்தீயாய் சுட்டெரிக்கட்டும்… தமிழக தலைவர்கள் ஆவேசம். காணொளி இணைப்பு!



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது. மே பதினேழு இயக்கம் சார்பாக 26ம் திகதி இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் ஈய்ந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது.
இதில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்காணோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.இதில் 50000 மக்களுக்கும் மேல் கலந்து கொண்டனர் .

அதனை தொடர்ந்து குமுதம் இணையத்திற்கு தமிழக தலைவர்கள் வழங்கிய உரை.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்த மே பதினேழு இயக்கம் திருமுருகன் மற்றும் அவருடன் சேர்ந்து கடமையாற்றிய அனைவருக்கு உலக தமிழர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்............... read more

No comments:

Post a Comment