Translate

Tuesday, 28 June 2011

தேசியக் கொடி இனி என்ன காரணம் சொல்வீர்கள்!?


Flag of Tamil Eelam (Tamil's Flag)

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவில் தமிழீழத் தேசியக் கொடிக்கு பெரும் பிரச்சனை இருப்பதாகவே சிலரால் தொடர்ந்தும் காட்டப்படுகிறது.
Flag of Liberation Tigers of Tamil Eelam (LTTE)

கொடியை பிடித்தால் பிரச்சனை, வெள்ளைகளுக்கு பிடிக்கவில்லை, காரியம் நிறைவேறாது என தடைகளை உடைக்க வேண்டியவர்களே தடைபோட்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் தடை இல்லை என சட்டபூர்வமாக சாதித்துக்காட்டிய பின்னரும் இவர்கள் கேட்பது என்ன தெரியுமா? தடை இல்லையென்று நீதிமன்ற சான்றிதல்! எங்கே என்பதுதான்!

சட்டத்தாரணிகளை நியமித்து ஒருமாத காலம் ஆய்வுக்குப் பின்னர் தரப்பட்ட அறிக்கை தமிழீழத் தேசியக் கொடிக்கு பிரித்தானியச் சட்டப்படி எவ்வித தடையும் இல்லை என்பதுதான்.
நீதிமன்றம் செல் என்றால் தடையில்லாதா விடயத்திற்கு எதற்கு வழக்குப்போட வேண்டும் என சட்டத்தாரணிகளே கேள்வி கேட்கும் பொழுது இவர்கள் கேட்கும் சான்றிதல் எதற்காக?
தமக்கு எவ்வித பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகவா? பிரச்சனைகள் வரக்கூடாது என்றால் ஏன் போராட வருகின்றீர்கள்?
சரி நீங்கள் கேட்கும் சான்றிதல் தர நாம் தயார் அதற்கு செலவாகும் பணத்தை தர நீங்கள் தயாரா?
அனைத்துக்கும் ஆரம்பம் ஒன்று வேண்டும் அந்த ஆரம்பம் தற்போது கிடைத்திருப்பதாக நம்புகின்றோம் அந்த நம்பிக்கை பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடாத்திய கோடை விழா மற்றும் வல்லை புளுஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடத்திய 50ம் ஆண்டு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பல ஆயிரம் மக்கள் மத்தில் இந்நிகழ்வு எவ்வித தடையும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது.
இளையோர் சார்ந்த அமைப்புக்கள் தேசியக் கொடி ஏற்கனவே ஏற்றியுள்ள போதும்  பெரும் தொகையைக்கொண்டதும் மக்கள் அமைப்பாகவும் உள்ள அமைப்பு தெசியக்கொடியை முதல் முறையாக ஏற்றியுள்ளது.

No comments:

Post a Comment