Translate

Wednesday, 6 July 2011

"சிறிலங்கா படுகொலைக்களம்- சிறிலங்கா மீது அவுஸ்திரேலியா மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமா?" கருத்துக்கணிப்பு.

"சிறிலங்கா படுகொலைக்களம்- சிறிலங்கா மீது அவுஸ்திரேலியா மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமா?" கருத்துக்கணிப்பு.


அவுஸ்திரேலிய வானொலியான 3AW  "சிறிலங்காவின் படுகொலைக்களம் காட்டிய உண்மைகளை ஆதாரமாக வைத்து அவுஸ்திரேலியா  அரசு சிறிலங்கா மீது மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமா?" என்ற  கருத்துகணிப்பை அவுஸ்திரேலியா முழுவதும் செய்துகொண்டிருக்கிறது.நேற்று அவுஸ்திரேலிய அரச தொலைக்காட்சியான ABC இல் ஒளிபரப்பிய என்ற விபரண காணொளியை முழுமையாக உள்ளடக்கிய"4 corner"s நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அது அவுஸ்திரேலிய பல்லின மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுதியதோடு மட்டும் இல்லாமல், சிறிலங்காவில் நிகழ்ந்த உண்மையான இன அழிப்பின் கோரத்தினை உணர வைத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் இதுவரை மெளனமாக இருந்தவர் இந்த காணொளியை கண்ணுற்ற பிறகு "சிறிலங்கா அரச படைகளின் அட்டூழியம் நிறைந்த கொலைகளையும் சித்திரவதைகளையும் தாங்கமுடியவில்லை எனவும் உடனடியாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்" என்ற கருத்துப்பட அறிக்கை வெளியிட்டுள்ளார்.உண்மையில் சிறிலங்கா மீதான அவுஸ்திரேலிய வெளியுறவு கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் என அவதானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

3AW என்பது அவுஸ்திரேலிய வானொலிகளில் மிகவும் பிரபலமான வானொலி.இந்த வானொலியை லட்சக்கணக்கான மக்கள் தினமும் கேட்கிறார்கள்.எனவே இந்த கருத்துக்கணிப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தினை அவர்களின் மத்தியில் ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.இவ்வாறான கருத்துக்கணிப்புகளை சிறிலங்கா அரசு சதி செய்து முறியடிக்கும் நடவடிக்கைகளினை கடந்த காலங்களில் செய்ததை எல்லோரும் அறிவோம்.எனவே எம் புலம்பெயர் உறவுகள் இந்த கருத்துகணிப்புக்கு சென்று உங்களின் வாக்குகளை செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்ப்பொடியன் podiyan@gmail.com

No comments:

Post a Comment