Translate

Wednesday, 6 July 2011

ஸ்கொட்லண்ட் கிளாஸ்கோவில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நாள் நிகழ்வுகள்!

ஸ்கொட்லண்ட் கிளாஸ்கோவில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நாள் நிகழ்வுகள்!

ஐக்கிய இராட்சியத்தின் ஸ்கொட்லண்ட் பகுதியின் தலைநகரான கிளாஸ்கோவிலும் தேசப்புயல்களான தற்கொடையாளர்களை நினைவுகொல்ளும் நினைவுவணக்க நிகழ்வு இடம்பெற்றது. 

ஸ்கொட்லண்ட் வாழ் புலம்பெயர் தமிழர்களால் கிளாஸ்கோவில் முன்னெடுக்கப்பட்ட இந்த வணக்க நிகழ்வில் முதல் அங்கமாக பொதுச்சுடரேற்றல் இடம்பெர்றது.

1993 ஆம் ஆண்டு வங்கக்கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆயுத வினியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவைத் தழுவிய மாவீரரான கடற்புலி லெப்ரினன் பரந்தாமன் அவர்களின் சகோதரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். 

ஈகைச்சுடரினை 1997 ஆம் ஆண்டு ஆணையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத்தழுவிய மாவீரரான லெப்ரினன் கலைராஜா அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். 

தொடர்ந்து மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

சாவிலும் சிரித்த முகத்தோடு தமிழீழ மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதற்காக தங்கள் சுவாசங்களை நிறுத்தி  காற்றிலும், நீரிலும் வீரகாவியமாகிய அந்த இரும்புமனிதர்களின் பொது நினைவுருவப்படத்திற்கு 2008 ஆம் ஆண்டு சர்வதேசக் கடற்பரப்பில் தம்மையும் அழித்து கப்பலையும் அழித்து விடுதலைப்புலிகளின் வீரமரபு காத்து விடுதலைக்கு உரமான 9 கடற்புலிகளில் ஒருவரான மாவீரர் லெப்ரினன் கேணல் கபிலன் அவர்களின் மாமனார் மலர்மாலையினை அணிவித்தார். 

தொடர்ந்து மக்களின் மலர்வணக்கமும், கவிதைகள், பாட்டு, நினைவுரைகள் ஆகிய எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment