Translate

Monday, 11 July 2011

தம்பி என்று பிரபாகரனை செல்லமாக விளித்த அமைச்சர்

தம்பி என்று பிரபாகரனை செல்லமாக விளித்த அமைச்சர்

திங்கள், 11 ஜூலை, 2011
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை 'தம்பி' என செல்லமாக விளித்துள்ளார் சிறிலங்காவின் மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சரான ராஜித சேனரட்ன.

கடந்த சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு விளித்துள்ளார்.


"அன்று 1988ம் ஆண்டு நான் யாழ்ப்பாணம் வந்த போது தம்பி பிரபாகரனுடன் இருந்த தோழர் பாலகுமார் (தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரமுகர்) அவர்கள் என்னைக் கட்டித் தழுவி முத்தமிட்டு வரவேற்றார்." என உரையில் குறிப்பிட்டார் அமைச்சர் ராஜித சேனரட்ன.

No comments:

Post a Comment