உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில். உள்ளுராட்சி சபைகளுக்கான பிரசாரப்பணிகளை எமது கட்சியின் இளைஞர்கள் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தல் இன்று காலை மேற்கொண்டிருந்தனர்.
வீடு வீடாகச்சென்று பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த படையினர் பிரசாரப்பணிகளை எந்தக் கட்சிக்காக மேற்கொண்டிருக்கின்றீர்கள் எனக்கேட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த பிரசார துண்டுப்பிரசுரங்களை வாங்கிப்பார்த்துவிட்டு ஜனாதிபதிக்கு மட்டுமே பிரசாரம் மேற்கொள்வேண்டும் என கூறியதுடன் இளைஞர்கள் சிலர் மீது துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் மாவட்டபாரர்ளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்க்குக் கொண்டுவரப்படும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment