Translate

Wednesday, 6 July 2011

ராஜபக்ஷேயை அழைக்கிறது பாகிஸ்தான்! நெருக்கடியில் இந்தியா!!

பாகிஸ்தான் பிரதமர் சையத் யூசுப் கிலானி, ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு நேற்று (செவ்வாய்கிழமை) அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தமது அரசு செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


“எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இருப்பினும் பாகிஸ்தானுக்கும், ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தங்கள் சரியான முறையில் இல்லை. கிட்டத்தட்ட 6 வருடங்கள் எமது பொருளாதார ஒப்பந்தங்களில் ஒரு பின்னடைவு இருந்து வருகின்றது.

இந்தப் பின்னடைவை நீக்கி, பாகிஸ்தானுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தங்களை முன்னிலைப் படுத்துவதே, எமது அரசின் வெளிவிவகாரக் கொள்கையில் தற்போது முக்கிய அம்சமாக உள்ளது” என்றும் கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர்.

ஸ்ரீலங்கா, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகளவு பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்து வைத்திருக்கும் நாடு, தற்போது இந்தியாதான்!

பாகிஸ்தானின் இந்த அழைப்பு, புதுடில்லியை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப் போகின்றது. இந்திய உயர்மட்டக் குழு ஒன்றின் ஸ்ரீலங்கா விஜயத்தை விரைவில் எதிர்பாருங்கள்!
http://uyarvu.com/index.php?option=com_content&view=article&id=10637:2011-07-06-08-27-08&catid=45:news&Itemid=67

No comments:

Post a Comment