Translate

Friday 12 August 2011

சிறீலங்கா அரசுக்கு இன அழிப்பு அவர்களுடைய தேசியக் கொள்கையாக இருப்பதை மீண்டும் அடையாளம் காட்டிய "செஞ்சோலை படுகொலை ".5 ஆம் ஆண்டு நினைவாக ...

செஞ்சோலை நினைவுசுமந்து சுடர்வணக்க நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் :

12249 Berlin                                                              60439 Frankfurt am Main
Wedellstr 57                                                              Saalbau Titus Forum ,Walter-Möller-platz ,Am 14.08.2011                                                          Am 14.08.2011 
Um 10:00 Uhr                                                           
Um 16:00 Uhr

 "சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்". "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" .இப்படித் தான்  கௌசிகா  குருதி தோய்ந்த இறுதி நேரத்தில் அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள். மறக்குமா எம் நெஞ்சம் ?????.


பிஞ்சு வயதில் சிங்கள இனவெறி அரசின் கொடூர தாக்குதலால்  பெற்றோரை இழந்து அன்பு பாசம் அரவணைப்பு பாதுகாப்பு அனைத்தையும் பறிகொடுத்து  அநாதரவாக தத்தளித்து நின்ற இந்தக் குழந்தைகளுடைய சோகத்தை தேவையை  உணர்ந்து அவர்களது துயரைத் துடைத்து தனது பிள்ளைகளாக  அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்தெடுப்தற்காக தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்  உருவாகி செயலில் கண்ட அமைப்பு தான் செஞ்சோலை.

2008.08.14 ஆம் திகதி அதிகாலை ஏனைய பள்ளி மாணவர்கள் உட்பட செஞ்சோலையில்  முதலுதவி  பயிற்சிக்காகக் காத்திருந்த  53 மாணவிகள் , மொத்தமாக 61 பேர் கொல்லப்பட்ட கொடூரம் மனதை உருக்கக் கூடியதாகும்.எண்ணற்ற கனவுகளுன் பரீட்சைக்காகக் காத்திருந்த எம் இன மொட்டுக்களை கிள்ளி எறிந்து எரித்த சிங்கள இனவெறி அரசு   இன அழிப்பு அவர்களுடைய தேசியக் கொள்கையாக இருப்பதை அடையாளம் காட்டியது .  வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள். ஆசிரியர்கள், அரசியல்வாதிகள்...... அறிஞர்களென எமக்குக் கிடைக்கவிருந்த அருமருந்துகள் எத்தனை எத்தனை ???

http://www.youtube.com/watch?v=oBBP8WGxkkQ

அத்தனை குஞ்சுகளையும் பிஞ்சு வயதினில் அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அள்ளி எறிந்தான் இனவெறியன் குண்டுகளை .
’உலகின் மனிதம் தொலைந்த நாள்" என்ற தலைப்பில் அன்று 22  நகரங்களில் யேர்மனியில் நீதி கேட்டோம் .இன்றும் நாம்  உறுதி தளராது கடந்த வாரங்களுக்கு முன்னும் 20 நகரங்களுக்கு மேலாக கறுப்பு ஜூலை நினைவு சுமந்து அன்றில் இருந்து இன்று வரை ஓயாமல் போராடுகிறோம்.
உலகத் தமிழர்களின் ஒன்றிணைந்த உரிமைப்போராட்டம் வலுப்பெறும் இவ் வேளையில் முழு மூச்சோடு முன்னகர்வோம் .
தமிழீழத்தில் பிறக்கும் எந்தக்குழந்தையும் அநாதரவாக நிற்கக்கூடாது என்கிற தேசியத் தலைவரின் உயரிய சிந்தனையை எம் தலை மேல் சுமந்து எம் உறவுகளுக்கு  உதவிக்கரத்தை வழங்குவோம் .குருதியில் உறைந்த அந்த கொடிய நினைவுகள் சுமந்த நாளை நினைவுசுமந்து எதிர்வரும் 14 .08 .2011 அன்று யேர்மனியில் இரு நகரங்களில் சுடர்வணக்கம் செலுத்தி எம் இன மொட்டுக்களை நினைவுகூற   யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு  அழைக்கின்றனர் . அனைத்து யேர்மன் வாழ் தமிழ் மக்களும் அவ் நிகழ்வில்   கலந்து கொண்டு எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டி எம் விடுதலையின் பாதையில் உண்மை உள்ள மனிதர்களாக எம் உறவுகளுக்காக நீதி வேண்டி தொடர்ந்தும் போராடுவோம்.  

http://www.youtube.com/watch?v=3EZ-09OI_EE&feature=related

http://www.youtube.com/watch?v=Ih0trpMzrko&feature=related


ஏனைய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்              
நன்றி 
தமிழ் பெண்கள் அமைப்பு -யேர்மனி
YouTube - Videos from this email

No comments:

Post a Comment