Translate

Friday 26 August 2011

செப்.9-ல் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு


முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், பேரரிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.



இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 


மற்ற மூவரின் கருணை மனுக்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார்.

கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்ததற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை, தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் வடிவில் அனுப்பியது.

அந்தக் கடித்ததை தமிழக அரசு வியாழக்கிழமை வேலூர் சிறைக் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியது.

அந்தக் கடித்ததைப் பெற்றுக் கொண்ட வேலூர் சிறைத் துறை அதிகாரிகள், 'முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ம் தேதி காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்,' என்று தெரிவித்தனர்.

இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக வேலூர் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment