Translate

Tuesday, 13 September 2011

பிரித்தானியாவில் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சிநாள் 2011 ற்கான நிகழ்வு ஏற்பாட்டுக்குழு சந்திப்பு.



2011 ஆம் ஆண்டின் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை வழமைபோல் இம்முறையும் EXCEL மண்டபத்தில் பிரித்தானியாவில் நடாத்துவதற்கான ஒழுங்குகளை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் முன்னெடுத்துவருகிறது.


அதன் அடிப்படையில் ஏற்கனவே ஊடகங்களினூடாக அறிவித்ததின் படி நேற்று (11-09-2011) தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் அலுவலகம் ஒன்று லண்டனில் இயங்க ஆரம்பித்ததோடு  லண்டனில்  2011 ற்கான தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்விற்கான செயற்குழுவின் சந்திப்பும் நடைபெற்றது.


இதில் பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நிதி கையாழுகை தொடர்பாக விவாதிக்கப்பட்டு அனைவரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அதற்கமைய இந்த நிகழ்விற்கான (தேசிய நினைவெழுச்சிநாள் 2011 ற்கான) ஆரம்பகட்ட நிதிகளை பெறுவது எவ்வாறு, நிகழ்விற்காக மக்களின் பங்களிப்புக்களாக வழங்கப்படும் நிதிகளை எப்படி பெற்றுக்கொள்வது போன்ற முடிவுகள் எட்டப்பட்டு அதற்கான மாதிரி வடிவமைப்புக்களும் காண்பிக்கப்பட்டன.


அவையாவன;
1) மக்களால் வழங்கப்படும் நிதிகளை பெற்றுக்கொள்ளும் போது தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் அதற்கென சிறப்பான முறையில் பாதுகாப்பு அடிப்படையில் அச்சிடப்பட்ட பற்றுச்சிட்டைகளை பணம் பெற்றுக்கொள்ளும் அதே சமகாலத்தில் வழங்குவது.


2) கடனடிப்படையில் பெறப்படும் நிதிகளுக்கும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் அதற்கென சிறப்பான முறையில் பாதுகாப்பு அடிப்படையில் அச்சிடப்பட்ட பற்றுச்சிட்டைகளை வழங்குவது.


3) தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் 2011 ஆம் ஆண்டின் தேசிய நினைவெழுச்சி நாளுக்கென சிறப்பான முறையில் பாதுகாப்பு அடிப்படையில் அச்சிடப்பட்ட கீழ்க்காணும் பற்றுச்சிட்டைகளை தவிர வேறு எதையும் வழங்கியோ, அல்லது பற்றுச்சிட்டைகள் வழங்கப்படாமலோ எந்த ஒரு தனிநபரிடமும் பணம் பெறப்பட மாட்டாது.


4) ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் இப்பற்றுச்சிட்டைகளை தவிர வேறு எதனையும் மக்களிடம் பணம் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் பயன்படுத்தாது என்பதை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்துவது.


5) எதிர்வரும் நாட்களில் பிரித்தானியாவின் ஏனைய பிராந்தியங்களில் தேசிய நினைவெழுச்சிநாள் 2011 ற்கான மக்களுடனான சந்திப்பினை ஊடகங்களினூடாக அறிவித்து  மேற்கொள்வது.


என்பனவாகும்.


மேலும் மக்கள் தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கக்கூடிய வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 2011 தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பிரித்தானிய அலுவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


TNRF
Suite No: 10
Ajay Business Centre (Ajbc)
497 Sunleigh Road,
Wembley
Middlesex
HA0 4LY




தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ற்கான பிரித்தானிய அலுவக தொலைபேசி இலக்கம்:
020 8733 8200
Extensions number 203


மின்னஞ்சல் முகவரி:
tnrf.co.uk@gmail.com


இணையத்தள முகவரி:
www.tnrf.co.uk


அருகாமையிலுள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையம்:
Alperton Tube Station

No comments:

Post a Comment