ஜெனீவாவில் உள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருக்கும் சமவேளை, நியூ யோர்க்கில் உள்ள ஐ நாவின் பீடத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்கெடுக்க வரும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும், மாபெரும் ஒன்றுகூடலொன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஒன்றுகூடல் நியூ யோர்க் ஐ நா உயர்பீடத்துக்கு முன்னால் செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர், அமைச்சரவைச் செயலர் சுகிந்தன் மற்றும் நா.த.அரசின் மதியுரைஞர் குழுவில் பங்காற்றிய பேராசிரியர் கரன் பார்கர் அம்மையார் ஆகியோர், ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரின் தொடக்கநாள் முதல் பங்கெடுத்து வருகின்றனர்.
இராஜதந்திரிகள், ஐ நா அதிகாரிகள், மனித உரிமை அமைப்பாளர்கள் என பலமட்டத்திலான சந்திப்புக்களை நடாத்தி வரும் நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள், கூட்டத் தொடரின் நிறைவில் முழுமையான ஊடக அறிக்கையொன்றினையும் வெளியிடவுள்ளனர்.
இதேவேளை, உலகத் தலைவர்கள் பங்கெடுக்கும் ஐ.நா சபையின் வருடாந்த கூட்டத்தில் பங்கெடுக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை உலகின் முன் அம்பலப்படுத்துவோம் !
சிறிலங்கா அரசினால் தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல்- இராணுவ தலைவர்கள் மீது சர்வதேச விசாரணைய நடத்த உலகத் தலைவர்களை கோருவோம் !
ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி இந்த நியூ யோர்க் ஐ நா முன்னலான ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
கனடிய தமிழர் அமைப்புக்களின் உறுதுணையுடன் இந்த ஒன்றுகூடல் எதிர்வரும் செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
ஒன்றுகூடலில் கனடிய தமிழ் உறவுகள் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கும் பயண ஒழுங்குகளுக்கும் 647 - 822 -8062 / 416 -291 -7474 / 647 -209 -4100 இந்த தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் சனநாயக வடிவமாக திகழ்கின்ற நாடுகடந்த தமழீழ அரசாங்கம், சமகாலத்தில் முன்னெடுத்துவருகின்ற காத்திரமான இருவேறு நகர்வுகளுகாக இது கருதப்படுகின்றது.
நாதம் ஊடகசேவை
No comments:
Post a Comment