Translate

Thursday 15 September 2011

அன்புடன் அம்மையாருக்கு!

அன்புடன் அம்மையாருக்கு!

தமிழ்மகன் எழுதும் மடல் இது.

எதிர்வரும் 12ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உண்மைகளை மறைக்கும் இலங்கை அரசின் குழுவில் தாங்களும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எச்.எம்.சார்ஸ்சும் அங்கம் வகிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.தமிழ்மக்கள், அரச தரப்பினரிடம் இருந்து தமக்கு எதுவிதமான, முன்னேற்றகரமான பலா பலன்களும் கிடைக்கவில்லை. அதாவது மனித உரிமைப் பாரபட்சங்கள் நீக்கப்படவில்லை, அச்சுறுத்தல் சூழல் போக்கப் படவில்லை, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, இன முரண்நிலைக் கட்டமைப்பில் மாற்றம் நிகழவில்லை என்ற கருத்துக்களை நிலை நாட்டியுள்ள காலம் இது.



அவர்கள் வெளிப்படுத்தியுள்ள, வெளிப்படுத்தும் பாரபட்சமற்ற அனுபவத்தின் அடிப்படையிலான, உரிமைவெளிப்பாட்டு அடிப்படையிலான கருத் துக்களைச் செவிமடுத்து, பொறுப்புடன் அவதா னித்து அந்த மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதே இப்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளதும், அரச அதிகாரிகளதும், பொதுநல அமைப்புக்களதும் கட்டாயக் கடமையாக உள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தாங்கள் மக்களது உணர்வுகளுக்கும், அவர்கள் அனுபவித்துவரும் துன்பங் களுக்கும் (குறிப்பாக வன்னி மக்கள்)பதில் கூறும் வகையில் இனிவரும் நாள்களிலாவது உங்கள் தார்மீக, பொறுப்புடன் கூடிய, நடுநிலையான செயற் பாடுகளைச் செய்வீர்கள் என எண்ணுகின்றோம்

ஏற்கனவே இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க அரச தரப்பிலிருந்து விசேட குழு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. இந்த குழுவுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமைகள் அமைச்சராக இருந்து வெளியுலகுக்கு உண்மைகளை மறைத்துவந்த, இப்போது பெருந்தோட்டத்துறை அமைச்சராக உள்ள மஹிந்த சமரசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீர் வழங்கல் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சூழல் அபிவிருத்தி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா (இவர் யுத்த காலத்தில் தகவல் ஊடகத்துறை அமைச்சர்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கூட்டத்தின்போது இலங்கைக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் எனவும், அதனை முறியடிக்கக் கூடிய வகையில் இந்தக் குழுவினர் செயற்படுவர் எனவும் அறிய முடிகின்றது.

இந்தக் குழுவினருடன் போதாக்குறைக்குத் தமிழ் மக்களைப் பிரதிபலிக்கும் வகையிலான அரசுக்குச் சார்பாக பிழைகளை நியாயப்படுத்தக் கூடிய சிலரையும் அங்கம்வகிக்கச்செய்து தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை பொய்யாக்க அரசு முயன்று வருகின்றது.இதற்காகத் தம்மால் நினைத்தபாட்டுக்கு அசைக்கக்கூடிய கைப் பொம்மைகளை அரசு தேடிவருகிறது. இந்த வலைக்குள் இப்போது உங்கள் பெயரும் அடங்குவதாக அறிகின்றோம்.

அரச கட்டுப்பாட்டில் இப்போதுஇதற்குச் சாதகமாக அசையக்கூடிய நிலையில் அரச தரப்பினரால் தாங்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளீர்கள் என்பது வேதனை தருகிறது.அண்மையில் இராணுவத்தினரால் கொழும்பில் நடத்தப்பட்ட போர் அனுபவப் பகிர்வு தொடர்பான சர்வதேசக் கருத்தங்கில் தமிழ்மக்களுக்கு ஒவ்வாத சில கருத்துக்களை தாங்கள் வெளிப்படுத்தியி ருந் தீர்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.தாங்கள் அதன்போது ஆங்கிலத்தில் எழுதி வாசித்த சில கருத்துக்களை இங்கே நினைவு கூருகின்றேன்.

முல்லைத்தீவில் அரச அதிபராக நான் செயலாற்றிய காலப்பகுதியில் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர்.போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங் களில் பொதுமக்களின் உணவு உள்ளிட்ட அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரச அதிகாரிகள் என்ற வகையில் நாங்கள் பெரும் சிரமப்பட்டோம்.

இந்தக் காலப்பகுதியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரசிடம் கோரிக்கைகளை முன் வைக்கும் போதும் நான் விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டலுக்கு உள்ளானேன்.வடபகுதி மக்களை விடுதலைப் புலிகள் பணய மாக வைத்துக் கொண்டே போரை நடத்தினர். இந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு பாதுகாப்புப் படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாதுகாப் புப் படையினர் எவ்விதத்திலும் பொதுமக்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்த வடபகுதி மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

அவர்கள் சட்டரீதியாகவும், நாகரிகமான முறையிலும் தமது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக இருந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தனர். விடுதலைப் புலிகளின் அச்_றுத்தலில் இருந்து அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தமைக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் எந்தளவுக்குப் பொதுமக்களைத் துன்புறுத்தினார் கள் என்று எனக்கு நன்கு தெரியும். தற்போது, விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வடபகுதி யில் தமிழ் மக்கள் சகல வசதிகளுடன் சுதந்திரமாக வாழ்கின்றனர். போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்கள் அனைத்தும் அரசால் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள், பாதுகாப்புப் படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை மறந்து விடமுடியாது'' என்று தெரிவித்திருந்தீர்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் மிகைப்படுத்தல்கள் இருக்கக்கூடும். ஆனாலும் நீங்க சொல்ல வந்த உள்ளடக்கம் இதுபோன்ற ஒன்றே என்பதையும் அவ்வாறு இல்லாத ஒரு அறிக்கையை நீங்கள் வழங்க முடியாத சூழல் உங்களுக்கு இருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.இதுபோன்ற கருத்தை நல்லிணக்க ஆணைக்குழு வின் முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போதும் தாங்கள் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டில் அம்மையார்
அதேவேளையில் இன்னுமொரு விடயத்தை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.வன்னியில் போர் உக்கிரமடைந்த காலம் அது. முல்லைத்தீவு நகர்பகுதிமீது நள்ளிரவு வேளை இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். மருத்துவமனை, தங்களது இல்லம் போன்ற பகுதிகளில் ஷெல்கள் பரவலாக வீழ்ந்து வெடித்தன. இதில் தாங்கள் உட்பட 16பேர் காய மடைந்தனர். சம்பவத்தில் ஒருவயதுக் குழந்தை யும் பலியாகியது. முல்லைத் தீவு மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் \ண்முக ராஜாவின் மனைவி திருமதி ரேணுகாவும் காயமடைந்தார்.

தாக்குதலில் கையில் காயமடைந்த நீங்கள் அந்த வேதனையுடன் சம்பவ இடத்திலிருந்து அழுதழுது விடுதலைப் புலிகளின் ஊடகங்களுக்கும் ஏன் பி.பி.சி செய்திச் சேவைக்கும் பேட்டி வழங்கியிருந்தீர்கள்."அதில் சிங்கள இராணுவம் திட்டமிட்டு தமிழ்மக்களின் வாழ்விடங்கள் நோக்கி கண் மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. அரசு பிரதிநிதியான எனக்கே பாதுகாப்பில்லை. எவ்வாறு மக்களைப் பாதுகாப்பது'' என கண்ணீர் மல்ல கதறினீர்கள்.

அப்போதுதான் உங்கள் முன்பாக கமெராவுடன் நின்று கொண்டிருந்தேன். அப்படி உங்களைப் பார்த்து, நீங்கள் பேசியதைக் கேட்ட எனக்கு இப் போது நீங்கள் கூறுபவற்றை ஏற்க முடியாமல் இருக்கிறது. எனினும் வன்னியிலும் நீங்கள் பணி யாற்றிய போது இரு தரப்புகளாலும் உங்களுக்கு இருந்த நெருக்கடிகளை ஒதுக்கிவிட முடியாது தான். உண்மையில் உங்களது இந்த இரு வேறு பட்ட நிலைகளுக்கு காரணம் நீங்கள் ஓர் அரச நிர்வாகப் முகவர் என்பதும் புரிகிறது.

உங்களது பதவியையும் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் தக்கவைப்பதற்காக இந்த இரு நிலைப்பாடுகளை நீங்கள் எடுக்க வேண்டி இருக்கலாம்.இவை அனைத்தும் உள்நாட்டுக்குள் முடிந்து போனவை. விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டில் வன்னியில் மக்கள்இருந்தபோது அரச பிரதிநிதியாக தாங்கள் இருந்தாலும் விடுதலைப்புலிகளது செயற் றிட்டங்களையே அமுல்படுத்தவேண்டிய நிர்ப்பந் தம் இருந்தது. அதுபோல இப்போது அரசின் நேரடி நெறிப் படுத்தலின் கீழ் நிர்வாகப் பொறுப்புடன் தாங்கள் உள்ளீர்கள். இறுதி போர் நடந்த காலப்பகுதி யில் வன்னியில் நீங்கள் இருந்தீர்கள் .
இவ்வாறான சாதக நிலைகளைப் பயன்படுத்தி அரசதரப்பினர் உங்களை இலங்கைக்கு சர்வ தேச மட்டத்தில் அதி கூடிய நெருக்கடிகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஐ.நா. மனிதஉரிமைகள் கூட்டத்தொடரிலும் ஒரு முக்கிய சாட்சியாகப் பயன்படுத்த முயல்கின்றனர்.

கூட்டத்தொடரில் நீங்கள் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை மட்டுமே வாசிப்பீர்கள் என எதிர் பார்க்கப்பட்டாலும் சில வேளைகளில் இலங்கை அரசுமீது கூடுதல் நெருக்கடிகள், குற்றச்சாட்டுக்கள் முடுக்கிவிடப்பட்டால் அதை முறியடிக்க உங்களை போர் வலயத்தில் கடமையாற்றிய தமிழ்ப் பிரதிநிதி என்ற அடிப்படையில் நேரடிச் சாட்சியாக அரசு பயன்படுத்தலாம்.இங்குதான் பிரச்சினை ஏற்படுவதற்கு அதாவது தமிழ்மக்களது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கு நீங்கள் ஒரு பயன்படுத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனுநீதிக்கான சாட்சியாக இருப்போம்
----------------------------------------------------

இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் மக்களாகப் பார்க்கப்படுவதையும் அவர்களது வாழ்வுரிமைகள் மறுக்கப் படுவதையும் உலக நாடுகள் பல இன்றுவரை ஒரு பொருட்டாக எடுத்து செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு தேவை. அவர்களுக்கு இதுவரை இலங்கை அரசு இழைத்த கொடுமைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும். அதற்காக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே சர்வதேச சமூகம் இலங்கையை நெருக்க டிக்குள் தள்ளிவருகிறது.

இதற்காக ஐ.நா சபையின் அறிக்கை (40 ஆயிரத்துக்கும் மேல் பொதுமக்கள் கொல்லப்பட் டுள்ளனர்) வன்னியில் போரால் பாதிக்கப் பட்ட மக் களது நேரடி சாட்சிப் பதிவுகள், அங்க அவயவங்களை இழந்து வாழும் மக்களது பதிவுகள், விதவைக் குடும்பங்களது பதிவுகள் பெற்றோரை இழந்த சிறுவர்களது பதிவு தொகை மதிப்பீடுகள், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக காட்டப்படும் புகைப் படங்கள், வீடியோக்கள், இன்றுவரை அதிர்ச்சியூட்டும் வகையில் தகவல் வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் என பல நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டில் கூறுவதெல்லாம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதைப் பாதித்து விடக் கூடாது என்பதே எனது வேண்டுதல். வடக்கு கிழக் கில் தமிழ் மக்கள் நீண்ட காலமாகப் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு அரசியல் ரீதியில் நிரந்தரமான நெருக்கடி உள்ளது. அவர்களதுவாழ்வுரிமைகள் மறுக்கப்படுகின்றன. இப்போதும் மக்கள் நெருக்கடியில்தான் வன்னியில் இறுதிப் போரின்போது பெருமள வான மக்கள் கொல்லப்பட்டனர், மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன, பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று நேர் அனுபவ சாட்சிகளும், ஆதார ஆவணங்களும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அரசு சொன்ன வாக்குறுதிகள் எவையும் பூரணப் படுத்தப்படவில்லை. வன்னியில் மக்கள் பலர் இன்னும் அடிப்படை வசதிகளற்று நெருக்கடிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.இவையெல்லாம் மனித தர்மத்தின் அடிப்படையில் பார்க்கப்படவேண்டும். காலம் காலமாக நெருக்கடிக் குள் வாழும் தமிழ் மக்களது துயர வாழ்வு அகல வேண்டும். அவர்கள் உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் போல சுதந்திரமாக வாழவேண்டும் என்ற மனப்பாங்குடன் செயலாற்ற வேண்டும்.இவற்றை மனதிலிருத்தி மனச்சாட்சியுடன் பேசுங்கள். தமிழினம் உங்களையும் நம்பி இருக்கிறது.

No comments:

Post a Comment