இலங்கையை சரியான வழிக்கு கொண்டுவரவேண்டும் – பொப் பிறவுன்
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கு உரிய பதிலை இலங்கை அரசு அளிக்கவேண்டும் என அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி தலைவர் பொப் பிறவுன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இலங்கை அரசு பதிலளிக்காவிட்டால் கனடாவை பின்பற்றி இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை அவுஸ்ரேலியாவும் புறக்கணிக்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால் போர்க்குற்றங்கள், குடிமக்களின் உரிமைகள் குறித்து செய்வதற்கு ஒன்றுமே இல்லாது போய்விடும்.
அதோடு கொமன்வெல்த் மாநாடு முடிந்தவுடன் அவற்றின் கதையும் முடிந்துவிடும்.
இலங்கையை சரியான வழிக்கு கொண்டுவரமுடியாதுபோனால் அது கொமன்வெல்த் பற்றி பாரியதொரு கேள்வியை எழுப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment