Translate

Wednesday 26 October 2011

மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர் !

மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து   ஓரிடத்தில் ஒன்றிணைவீர் !

மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு  தந்தவர் !

 உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டை தந்தவர் !

பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் !



அவர்தம் நாளில் பிரிந்து நிற்பதா ?  ஏன் ? தேசிய தலைவரின் அணியில் ஒன்றாய்தானே நின்றோம் ! விரும்பியோ விரும்பாமலோ இன்று ஏன் பிரிவு ?  வெற்றியில் கைதட்டினோம் , ஆர்ப்பரிதோம் அல்லவா ! களத்தில் சிங்களவன் மண்ணின் மைந்தர்களை ஆயுத பலத்தால் அடக்க கூடாது  என்று குளிரிலும் கூதளிலும் உழைத்த பணத்தை வாரி வழங்கினோம் அல்லவா ? ஏன் வழங்கினோம் ! புலத்தில் நின்ற செயல்பாட்டாளர்களுக்கு நாம் கொடுத்தது களத்தில் நிற்கும் உயிருக்கு ஆயுத பலம் சேர்க்க அல்லவா ? இன்று புலத்து தலைமைகளின் பரிவுக்க அப்பால் நாம் அதே களத்தில் மாண்ட வீரர்களுக்காக ,மக்களாக இணைந்து நிற்க வேண்டாமா ? யார் ஒருங்கமைத்தாலும்  நாங்கள் ஒன்றாக ஓரிடம் செல்வோம் என உரத்து கூறுவோம் !

மாவீர நாள் பணம் சேர்க்கும் நிகழ்வாக இனியும் நடாத்துதல் தேவை அற்றது . தமிழீழம் கிடைத்தாலும் மாவீரர் நாள் நடாத்த வேண்டும் ! அந்த தெய்வங்களை என்றைக்கும் மறக்க முடியாது ! அதற்கான வழிமுறைகள் இன்றே தொடங்கபடல் வேண்டும் . அதில் கணக்கு வழக்கு எனபது மிக முக்கியம் ! இந்த பணத்துக்கு என்ன நடக்கிறது என பிரதானிய போலீசார் கண்ணுக்குள் என்னை விட்டுக்கொண்டு பார்த்துகொண்டு இருக்கிறார்கள் ! அதனால் கணக்கு வழக்கை சட்டப்படி பேண தொடங்குவோம் !

சிங்கள பேரினவாதம் இது வரை பல முறை இதை எச்செல் இல் நடாத்த இடம் தரவேண்டாம் என முறையிட்ட போதும் பிரித்தானிய அரசு செயல்பட மறுத்தமை அதில் இணைந்த மக்கள் பலத்தை பார்த்தே ! பிரித்தானிய  தமிழ் மக்களை பகைக்க நேரிடும் என்று இந்த நிகழ்வில் கட்சி பாராமல் சிறி லங்காவின் முறையீட்டை கணக்கில் எடுக்க மறுத்தார்கள் . அதற்கு ஒரே காரணம் அந்த மக்கள் பலம் ! ஒருமித்து நாங்கள் நின்றபோது பலரும் அதை எதிர்க்க அச்சபட்டார்கள் ! அதை பிரிக்க யாருக்கும் இடம் தரவேண்டாம் ! பிரித்து பல இடங்களில் நடாத்தின் இதை தடை செய்து நிறுத்தும் செயல்பாட்டை சிறீ லங்கா முன்னெடுக்க வாய்ப்பு தருவதாய் அமையும் ! அதனால் மக்கள் வருடத்தில் ஒருநாள் ஒன்றாக நின்று பிரித்தானிய தமிழரின் பெரும் எழுச்சி நிகழ்வாக தொடர்ந்து இதை நடாத்துதல் அவசியம் !

அதனால் மக்களே எம்  தெய்வங்கள் மீது மதிப்பு வைத்து எம்மை யாரும் தடுக்க முடியாதபடி ஒன்றாக கை இணைந்து நிற்போம் ! தலைமைகள் உடைந்தாலும் நாங்கள் வழி தவறாமல் நடப்போம் ! தேசிய தலைவரும் மாவீர தெய்வங்களும் மட்டுமே எங்களை வழி நடத்தட்டும் !  பலவித மினஞ்சல்களும் இணையதளங்களும் பலவித கருத்துகளை கூறினாலும், நாங்கள் மக்களாக ஒன்றிணையும் ஒரே நாளான, எங்கள் மாவீர நாளை எச்செல் இல் வழமைபோல வழிசெய்வோம் . கதைகளை நம்பாமல் நேரடியாக சென்று ஐயங்களை தீர்துகொள்வோம் ! கண்ணால்  பார்ப்பதை காதால் கேட்பதை விடுத்து நேரடியாக சென்று ஐயங்களை தீர்த்து கொள்ளுதலே சிறப்பு.

 மக்களே இனியும் ஆட்டுமந்தைகளாய் அங்கே அடிக்க இங்கே ஓடுவதும் பின்னர் இங்கே அடிக்க அங்கே ஓடுவதும் வேண்டாம். இந்த மின்னஞ்சல் உட்பட எந்த மின்னஞ்சலையும் பார்த்து முடிவு எடுக்காதீர்  ! முதலில் மெய்பொருளை கண்டறிவீர் ! தலைமைகள் பிரிந்தாலும் வடிவங்கள் மாறினாலும் எம்மை எல்லாம் இலக்கை நோக்கி  நகர வைக்கும் அந்த பலத்தை தரும் எங்கள் மாவீரரின் ஆத்மாக்கள் என்றைக்கும் எம்மை வழிதவறாமல் காக்க வைக்கட்டும் !

இந்த மடல் யாருடைய தலைமையையும் எதிர்த்து எழுதப்பட்டதல்ல , ஒரே இடத்தில் ஒற்றுமையாக நடாத்தப்பட வேண்டும் என்ற நோக்கோடு மட்டுமே எழுதப்பட்டது !

 மாவீரரே உம் மீது சத்தியம் , நமது இலக்கை அடையும் வரை அடங்கோம்!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !
எல்லைத் தமிழன் mathan.dxb@gmail.com

No comments:

Post a Comment