ஊவா மாகாண அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தருமான செந்தில் தொண்டமான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு இலங்கை தமிழர்களின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதற்கு அமைச்சர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.
ஊவா மாகாண மின்சக்தி,எரிபொருள், இளைஞர் நலத்துறை அமைச்சர்; செந்தில்தொண்டமான் திருச்செந்தூரில் துவங்கிய கந்தசஷ்டி விழாவில் பங்கேற்பதற்காக அண்மையில் இந்தியா வந்திருந்தார்.
அத்துடன் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில், சாலைக்குமாரசாமி கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர், ''இலங்கையில் தற்போது சகஜநிலை திரும்பி உள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவிற்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக முதல்வர் கேட்டுக்கொண்டதன்பேரில் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கியுள்ளது. இதற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இலங்கைக்கு தினமும்15 விமானங்கள் வந்துசெல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 60 சதவீதம் பேர் தொழில்கள் துவங்கும் முயற்சியாக வருகின்றனர்'' என்று கூறினார்.
No comments:
Post a Comment