இன அழிப்பில் ஈடுபட்ட மகிந்தவையும் அதன் அரசையும் சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தி தண்டிப்பதற்கு போட்டி போட்டு போராட வேண்டியவர்கள் புலத்தில் கதிரைக்காக தமக்குள்ளே போர் தொடுத்துள்ளனர்.
ஒரு சில வாரங்களுக்குள்ளேயே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது அருமை சொந்தங்களை நச்சுவாயு குண்டுகளை வீசியும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியும் கொத்துக்குண்டுகளை கொட்டியும் நரபலியெடுத்து தமிழர் பூமியை மரண பூமியாக மாற்றி யுத்த இறுதியில் மீதமுள்ளவர்களை கத்தியால் வெட்டியும்,கோடாலியால் கொத்தியும், கண்ணைக்கட்டி சித்திரவதை செய்த பின் சுட்டுக்கொன்றும்,கண்களை தோண்டி வீசியும்,எமதருமை சகோதரிகளை பாலியன் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்து இன்று இறுமாப்போது உலகை வலம்வந்துகொண்டிருக்கும் மகிந்தவை தண்டிப்பதற்கு போராட வேண்டியவர்கள் தமக்குள்ளேயே போர் தொடுத்து இலங்கை அரசு செய்ய நினைப்பதை இவர்களே செய்து முடிக்கிறார்கள்......... read more
No comments:
Post a Comment