விரதம் இருப்பதால் நமக்கு என்ன நன்மை?
விரதம் இருப்பதன் மூலம் உடல் தூய்மை பெறும் மனம் வலிமைபெறும் இறைவனது அருள் நமக்கு கிடைக்கும்.
ஓயாமல் சாப்பிடுவதன் மூலம் ஓய்வெடுக்க முடியாமல் இருக்கும் நம் உடலின் ஜீரண உறுப்புகளுக்கும் அப்போது ஓய்வு கிடைக்கும்.
விரதத்திற்கு மறுநாள் நாம் சாப்பிடும்போது ஜீரண உறுப்புகள் சீராக இயக்கத் தொடங்கும். ஆலைகளில் பணி புரிபவர்களுக்கு வார விடுமுறை விடுவதுபோல ஆலயங்களுக்குச் சென்று அருள் பெற விரும்பும் நாம் ஆரோக்கியமாக இருக்க இந்த விரதங்கள் தேவை.
No comments:
Post a Comment