Translate

Monday, 21 November 2011

தமிழ் மக்களின் பிரச்சினைகளை த.தே.கூ.இனங்காண்பது சந்தேகம்

இராணுவத்தளபதி தெரிவிப்பு

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரச்சினைகளை உரியமுறையில் இனங்காணும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று இலங்கையின் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய தம்மை சந்தித்த பிரான்சின் தூதுவரிடம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியாகும். எனவே அதன் கருத் துக்கள், கோரிக்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை மையப்படுத்தியே அமைந்திருக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


வடக்கு,கிழக்கில் இராணுவமயம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் அமெரி க்கா உட்பட்ட நாடுகளுக்கான தமது விஜயத்தின் போது விடுத்த கோரிக்கை தொடர்பாகவே ஜெகத் ஜெயசூரிய இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இராணுவம் வடக்கு, கிழக்கில் கைவிடப்பட்ட பாடசாலைகளிலேயே முகாமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஜெயசூரிய, அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் கடமையை இராணுவம் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதே வேளை, யாழில் 150 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடுகளில் மட்டுமே இராணுவம் முகா மிட்டுள்ளதாகவும் அவை படிப்படியாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்றும் யாழ். இராணுவ கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
http://www.valampurii.com/online/viewnews.php?ID=25439

No comments:

Post a Comment