அரசின் தடையை மீறி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் - தொல்.திருமாவளவன் தலைமையேற்று நினைவுரையாற்றினார்!
தமிழகத்தில் மாவீரர் நாள் கொண்டாட அரசு தடைவிதித்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அத்தடையை மீறி, சென்னை, கோயம்பேடு, வீரநங்கை செங்கொடி அரங்கில், நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 4 மணிக்கு மணிமாறன் குழுவினரின் பறையிசையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சிறிவாணி நாட்டியாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. காசிஆனந்தன் எழுதிய "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா போராடுமா' என்கிற பாடலுக்கும் அறிவுமதி எழுதிய "கார்த்திகை 27' என்கிற பாடலுக்கும் நாட்டியமாடினார்கள்.
தொல்.திருமாவளவன் எழுதிய "பழந்தமிழன் வீரன் இன்னும் பட்டுப்போகவில்லை' என்கிற பாடலுக்கும், அறிவுமதி எழுதிய "வன்னிக்காட்டு வரிசைப் புலி' என்கிற பாடலுக்கும், காசி ஆனந்தன் எழுதிய "வருவான்டா பிரபாகரன் மறுபடியும்', "வானத்திலிருந்து திலீபன் சொல்கிறான்' ஆகிய பாடல்களுக்கும் லோகன் குழுவினர் நடனம் அமைத்து ஆடினார்கள்....................read more
No comments:
Post a Comment