Translate

Tuesday, 29 November 2011

இலங்கை அரசிடம் மண்டியிட்ட மலேசிய தமிழ் எம்.பிகள்!

இலங்கை அரசிடம் மண்டியிட்ட மலேசிய தமிழ் எம்.பிகள்!

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு கொழும்பால் மாத்திரமே உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தெரிவித்து உள்ளனர்.

மலேசிய எம்.பிகளான எம். மனோகரன், எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு வந்தனர்.


விஜயத்தை பூர்த்தி செய்கின்ற தறுவாயிலில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளனர்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது, வெற்றி பெற்ற தரப்பு யார்? தோல்வி பெற்ற தரப்பு யார்? என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விடயமே. பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை அரசைத் தவிர வேறு எவராலும் உரிய தீர்வை தமிழர்களுக்கு கொடுக்க முடியாது. ஏனையவர்கள் ஓரளவுக்குதான் ஏதாவது செய்ய முடியும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

எம்.பிமார் இருவரும் கடந்த காலங்களில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment