பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்துக்கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாகைகளைத் தாங்கி எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஜனாதிபதி மீது தண்ணீர் போத்தல் வீசித் தாக்கியுள்ளனர்.
இதன் போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி. ஹரின் பெர்னாண்டோ மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மீது புத்தகம் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீது தண்ணீர்ப் போத்தல்களை வீசி எறிந்தனர். அதே சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தரப்பினரிடமிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது தண்ணீர் போத்தல் வீசப்பட்டுள்ளது.
அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையை விட்டு வெளியேறியுள்ளனர்.
No comments:
Post a Comment