Translate

Tuesday, 29 November 2011

மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் மாற்று முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள்-வினோ எம்.பி விசனம்.

இடம்பெயர்ந்த மக்களை ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றுவது மீளக்குடியமர்த்தலாகாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். 
வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களிலிருந்த மக்கள் பலர் மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் காட்டுப் பகுதிகளில் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித அடிப்படை செய்துகொடுக்கப்படவில்லை எனவும்  அவர் தெரிவித்தார். இவ்வாறு அடிப்படை வசதிகளற்று காட்டுப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றைச் சேர்ந்த பாம்பு தீண்டி இறந்ததாகவும் வினோ எம்.பி. தெரிவித்தார்.

No comments:

Post a Comment