மாவீரர் வாரத்தையொட்டி யாழ். குடாநாட்டு இந்து ஆலயங்களில் மணியோசை எழுப்ப படையினர் தடை
மாவீரர் வாரம் ஆரம்பித்து விட்டதனால், காரைநகரில் உள்ள இந்து ஆலயம் எதிலும் மணி ஓசை எழுப்பக்கூடாது என்று கடற்படையினர் தடைவிதித்துள்ளனர்.
காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் கடற்படையினரின் இந்த அடாவடித்தனத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீர்கள் நினைவாக நவம்பர் 21ஆம் திகதியில் இருந்து மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வழமை நிகழ்வாக இருந்தது.
.எனினும், போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றதன் பின்னர் வடக்கு கிழக்கில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு உழுது தரைமட்டமாக்கப்பட்டன. அதனை அடுத்து வெளிப்படையாக மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்படுவது வடக்கு கிழக்கில் நின்றுபோனது. கடந்த மூன்று வருடங்களில் நவம்பர் இறுதி வாரத்தில் மாவீரர்கள் தொடர்பான எந்தவொரு நிகழ்வும் வெளிப்படையாக இடம்பெறுவதில்லை......... read more

No comments:
Post a Comment