Translate

Tuesday, 29 November 2011

"இதயநோய், புற்றுநோயை குணமாக்கும் அகத்திப்பூக்கள்"


அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக பலத்தை தருகிறது. அகத்திக்பூக்கள் சற்றுப் பெரியதாக இருக்கும். இவற்றை யாரும் சரியாக உணவாக உட்கொள்வதில்லை. இவற்றை கீரையுடனும் சமைத்து சாப்பிடலாம். தனியாக கூட்டு வைத்தும் சாப்பிடலாம். வெயிலில் அதிகமாக உழைப்பவர்களுக்கும், கண் எரிச்சல், தலைச்சுற்றல், சிறுநீரில் மஞ்சள் நிறமாக போவது போன்ற பாதிப்புகளுக்கு அகத்திப்பூக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.


 புகை பாதிப்பை போக்கும்

அகத்திப்பூக்களை சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து உணவோடு உண்டு வர அந்த ஏழு நாட்களில் புகைத்த விஷம் மலம் மூலம் வெளியேறிவிடும். பீடி, சிகரெட் பிடிப்பவர்களுக்கு அவற்றில் நாட்டத்தை குறைக்கச் செய்யும்.

 சளித்தொல்லை,தும்மல்,பித்தம் ஆகியவற்றை நீக்கும் சக்தி அகத்திப்பூக்களுக்கு உண்டு. உடல்சூடு,மூலநோய்,வாதம், கீழ்வாதம்,மார்புச்சளி ஆகிய நோய்களை அகத்திப்பூக்கள் குணமாக்கும்.

பித்தம் குறையும்

 அகத்திப்பூக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி இடித்து தூளாக்கி சலித்து வைத்துக்கொண்டு இரவு உறங்கும் முன் காய்ச்சிய பசும்பாலுடன் அரை டீஸ்பூன் அகத்திப்பூ பொடி கலந்து பருகி வந்தால் பித்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.

 புற்றுநோய்க்கு மருந்து

அகத்திப்பூக்களுடன் மிளகு, சீரகம்,ஓமம்,பூண்டு வெங்காயம் சேர்த்து நெய்யில் பொரித்து மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர இதயப்படபடப்பு, இருதய வீக்கம், சிறுநீரகநோய், புற்றுநோய் கட்டுப்படும்.

கண்பார்வை தெளிவடையும்

இரண்டுவாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரையும், வாரம் ஒருமுறை அகத்திப்பூக்களையும் சமைத்து உண்பவர்களுக்கு கண்பார்வை தெளிவடையும். அகத்திப்பூவின் சாறை பிழிந்து கண்ணில் விட கண்நோய் நீங்கும்.

 ரத்த சோகை குணமடையும் செந்நிற அகத்திப்பூவானது ரத்த ஒழுக்கு,ரத்தசோகை,கழலை,காய்ச்சல்,உடல்வலி, ஆகியவற்றைப் போக்கும் மருந்தாக செந்நிற அகத்திப்பூ பயன்படுகிறது.

No comments:

Post a Comment