Translate

Monday, 19 December 2011

அதிர்வின் வாசகர் ஒருவர் எழுதிய பகிரங்க மடல்:

அதிர்வின் வாசகர் ஒருவர் எழுதிய பகிரங்க மடல்:


தமிழ்தேசிய ஊடகங்களில் முன்னிலை வகிக்கும் தமிழ்த்தேசிய ஊடகமான அதிர்வுக்கு ஒருமடல்.


 முதலில் உண்மையாக உளைக்கும் தமிழ்த்தேசிய ஊடகள் ஒன்று சேரவேண்டும். அதனூடாக உண்மையாக உளைக்கும் தமிழ்த்தலைமைகளை ஒன்றுபடுத்தி எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை இலக்கு நோக்கி பயணிக்க வைக்க வேண்டும். ஊடகங்கள் தமக்குள் இருக்கும் பாகுபாடுகளை மறந்து ஒருவரைஒருவர் சேறுபூசுவதை அடியோடு கைவிடவேண்டும்.

தினந்தோறும் உனது செய்தியை விரும்பி படித்து வருகிறேன். தமிழுக்காகவும், தமிழ்த்தேசியத்திர்க்காகவும் நீ செய்துவரும் பணிகள் அளப்பெரியது. நெற்ரிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வளி நின்று தொண்டாற்றும் உனது சேவை அளப்பெரியது.

நான் இணயத்தில் செய்தி பாற்பதென்றால் முதலில் பாற்பது உனது செய்தி. அந்த அளவிற்கு நம்பகத்தன்மை. இருந்தும்,உனது நிறைவான சேவையை பாராட்டும் நான் உனது வளற்சி கருதி உனது குறைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த வகையில் கடந்த சில தினங்கழுக்கு முன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வு தொடர்பாக சில கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். நாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின் மூன்றாம் அமர்வு எருமை நகரத்தில்நடைபெறுவதாக சொல்லி இருந்தாய். முதலாவது இரண்டாவது அமர்வுகள் நடந்த இடத்தினையும் மூன்றாவது அமர்வு நடக்கும் இடத்தினையும் ஒப்பிட்டு, தற்போது எருமை நகரில் 3ம் அமர்வு நடைபெற்றவுள்ளது. இதைவைத்தே நீங்கள் பார்க்கலாம் அமர்வுகள் எங்கே நோக்கிப் போகின்றது என்று. எமக்கு எருமை நகரமா ? பசுமை நகரமா ?என்பது முக்கியமல்ல. எமக்குத்தேவை என்ன நடக்கபோகின்றது என்பதுதான்.

இதனை நீ முக்கியத்துவப்படுத்தியிருக்கத்தேவை இல்லை. மற்றது, வெளிநாட்டு இராஜதந்திரிகள் வருகைதொடர்பானது. எந்த நாட்டுப் பிரதிநிதிகள் பங்குகொள்கிறார்கள் என்பது திருவனந்தபுரம் பத்மானந்த சுவாமி மர்ம கோயில் அறைகளைப்போல ரகசியமாக உள்ளதாம். இவை எல்லாம் எதற்காக ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைப் பிடிக்கவில்லையா ? அப்படியாயின் மக்கள் ஏன் வாக்களித்தார்கள் ? தமிழீழம் என்பது மானம் உள்ள தமிழன் ஒவ்வொருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. அதனைத்தான் நாடுகடந்து நிறுவிஉள்ளார்கள். அதனை நிர்வகித்து செல்பவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அதனை உரிய முறையில் சுட்டிக்காட்டி திருத்துவதை விடுத்து தன்கையே தன்கண்ணைக் குத்துவது போன்று தேவை இல்லாத விடயங்களைப் பெரிது படுத்தி நக்கல் அடிப்பது தமிழ்த்தேசியத்திற்கு நல்லதல்ல.

ஒரு விடுதலைப்போராட்டத்தில் இலக்கினை நோக்கி சகலமக்களையும் ஒன்றுபடுத்தி பயணிக்க வைக்கவேண்டிய பொறுப்பு தேசிய ஊடகங்களுக்கு உண்டு. அந்தவகையில் பிரிந்து நிற்கும் எமது தமிழ்த்தலைமைகளை ஒர் அணீயில் ஒன்று படுத்த வேண்டும். எனது மதிப்பிற்குரிய அதிர்வே ! நீ நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. முதலில் உண்மையாக உளைக்கும் தமிழ்த்தேசிய ஊடகள் ஒன்று சேரவேண்டும். அதனூடாக உண்மையாக உளைக்கும் தமிழ்த்தலைமைகளை ஒன்றுபடுத்தி எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை இலக்கு நோக்கி பயணிக்க வைக்க வேண்டும். ஊடகங்கள் தமக்குள் இருக்கும் பாகுபாடுகளை மறந்து ஒருவரைஒருவர் சேறுபூசுவதை அடியோடு கைவிடவேண்டும்.

இதனை எம்மண்ணிற்காக மடிந்த மாவீரர்கள், மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி !

மீண்டும் சந்திப்போம்.

விடுதலை விரும்பி:

No comments:

Post a Comment