Translate

Tuesday, 13 December 2011

வட மாகாண ஆளுநரின் குற்றச்சாட்டிற்கு த.தே.கூட்டமைப்பு பதிலடி


பாடசாலை நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாட்டினை மறந்து தமிழீழ சிந்தனைகள் தொடர்பிலேயே உரையாற்றுகின்றனர் என்ற வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
ஆளுநரின் இக் குற்றச்சாட்டு குறித்து எமது ஒன்லைன் உதயனுக்கு கருத்துத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
மனித உரிமைகளை மீறிய ஒருவர், மனித உரிமைகள் மீறப்படக் காரணமாக இருந்த ஒருவர் ஆளுநராக இருந்து கொண்டு எம் மீது குற்றஞ்சுமத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
அவர் எமது ஒன்லைன் உதயனுக்கு வழங்கிய கருத்துக்கள் ஒலி வடிவில்.... 


No comments:

Post a Comment