Translate

Thursday, 26 January 2012

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு,அமெரிக்க செனட் சபைக்கு நிகரானது என்கிறார் ஜனாதிபதி –


விக்கிலீக்ஸ் - விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு,அமெரிக்க செனட் சபைக்கு நிகரானது என்கிறார் ஜனாதிபதி –
 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலானதீர்வு, அமெரிக்க செனட் சபைக்கு நிகரானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகுறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.


அரசியல் சாசனத்தின் பரிந்துரைகள் அனைத்துஅமுல்படுத்தப்படுவதுடன், மேல் சபை ஒன்றும் உருவாக்கப்படும் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகஅதிகாரிகளினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டகுறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கொலை, பாலியல் வன்முறை போன்றபாரியளவிலான குற்றச் செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் தண்டனை விதித்தல்போன்ற பொறுப்புக்களை மத்திய அரசாங்கம் வகிக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓபிளக், பிரியாவிடை பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் நடத்தியசந்திப்பு தொடர்பில் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி நடைபெற்றஇந்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜேம்ஸ் ஆர். மூர், 2009ம் ஆண்டு மேமாதம் 26ம் திகதி அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு குறிப்பொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

நல்லிணக்க நடவடிக்கைகள் இரண்டு விடயங்களைமையப்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டுமென ரொபர்ட் ஓ பிளக், ஜனாதிபதியிடம்வலியுறுத்தியுள்ளார்.

மனிதாபிhன அடிப்படையில் இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டிய அதேவேளை, அரசியல் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரம்பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என பிளக் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதிநிதிகளுடன் கூடுதல் பிணைப்பைஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப்பெற்றுக் கொள்வதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவினை வலுவிழக்கச் செய்யமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்ளும்நடவடிக்கைகளில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இணைத்துக் கொள்ள வேண்டுமெனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாணசபைகளுக்கு அரசியல் சாசனத்தில்விதந்துரைக்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, அமெரிக்கத் தூதுவரிடம் உறுதியளித்துள்ளார்.

எனினும், இதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் ஏற்றுக்கொள்வார்களா என்பது தமக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதுபிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரியளவிலான குற்றச் செயல்களுக்கு தண்டனைவிதிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: Colombo telegraph

No comments:

Post a Comment