Translate

Thursday, 26 January 2012

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு ஓர் கண்துடைப்பு


13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு ஓர் கண்துடைப்பு – லக்ஸ்மன் கிரியல்ல
 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் என்பது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஓர் கண்துடைப்பு நாடகம் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

 
13ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
1987ம் ஆண்டில் 13ம் திருத்தச் சட்ட மூலம் அறிமுகம் செய்யப்பட்ட போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டை பிளவுபடுத்த 13ம் திருத்தச் சட்ட மூலம் வழிகோலும் என சுதந்திரக் கட்சித் தலைவர்கள் அப்போது எதிர்ப்பை வெளியிட்டதாக லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment