Translate

Thursday, 26 January 2012

யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியை நிசாந்தன் இழந்தார்

news
யாழ். மாநகர சபையின் உறுப்பினரான சு.நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

அவர் உறுப்பினர் பதவி வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தால் அவர் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக யாழ். மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


அனையடுத்து இன்று முதல் நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிசாந்தன் ஈ.பி.டி.பி கட்சி சார்பில் மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் அவர் அக்கட்சியின் கொள்கைக்கும் சபை நடவடிக்கைக்கும் எதிராகச் செயற்படுவதாகக் கூறி அக் கட்சியின் தலைமை அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியது.

இதனையடுத்து உள்ளூர் அதிகாரசபை தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின்(262 ஆம் அத்தியாயம்) 10அ (1) (அ) என்னும் பிரிவின் கீழ் யாழ். மாநகர சபை தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment