Translate

Thursday, 26 January 2012

இனப்பிரச்சினை தொடர்பில் மூன்றாம் தரப்பு பங்கு கொள்ள வேண்டும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இது குறித்து அவர் எமது ஒன்லைன் உதயனுக்கு வழங்கிய கருத்து ஒலி வடிவில்...


இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுக்களில் மூன்றாம் தரப்பு பங்குகொள்ள வேண்டும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்துள்ளபோதிலும் ஒரு அங்குல அளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவேதான் இருதரப்பையும் விட மூன்றாம் தரப்பின் பங்கு அவசியமாகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எமது ஒன்லைன் உதயனுக்குத் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பில் உள்நாட்டில் தீர்வு காண முடியாத கட்டத்தில் 1987ம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. 2002ம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு நோர்வே சமாதான நடவடிக்கைகளில் மத்தியஸ்தம் வகித்தது. தற்போதும் அவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மூன்றாம் தரப்பின் அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் எமது ஒன்லைன் உதயனுக்கு வழங்கிய கருத்து ஒலி வடிவில்

No comments:

Post a Comment