ஞாபக மறதி உங்களுக்கு ஒரு பிரச்சினையா ..? கவலையை விடுங்கள் !
உலக மக்கள்தொகையில் ஒரு சத வீதத்திற்கும் குறைவானவர்கள்தான் நல்ல நினைவாற்றல் உள்ளவர்களாம்.. மற்றவர்களோ ஐந்து மணிக்குச் சொன்னதை ஆறு மணிக்குள் மறந்துவிடுபவர்கள்தானாம்.
ஞாபக சக்தியை அதிகரிக்க வழியிருக்கிறது ..
பல வருடங்களுக்கு முன் டோனி என்ற சிறு பையன் மும்முரமாக படித்து பாடம்செய்து கெட்டிக்காரனாகத்தான் பரீட்சைக்குப்போவான். ஆனால் விடை எழுதும்போது மறதியில் விடைகளை தொலைத்துவிடுவான். மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே படிப்பான் .. மறப்பான்.
வளர்ந்தபின், கிரேக்க கலாச்சாரத்தை கற்ற ஓர் சந்தர்ப்பத்தில் கிரேக்கர்கள் நினைவாற்றலில் கில்லாடிகளென்று அறிந்தான். அதற்கு அவர்கள் பயன் படுத்திய கருவி , கற்பனை!
முக்கிய குறிப்புகளை சிறுசிறு வரை படங்களாக,வர்ணங்களாக, கிறுக்கல் சித்திரங்களாக குறித்து வைப்பார்களாம். எழுத்துக்குறிப்புகளைவிட படக்குறிப்புகள் சட்டென்று நினைவுக்கு வந்துவிடும்.
அந்தச்சிறுவன் டோனி பிற்காலத்தில் எழுதிய ‘மன வரைபடம்’ என்ற புத்தகத்தில் இந்த விபரங்கள் உள்ளன ..
No comments:
Post a Comment