‘ மங்காத்தா ’ படத்தின்மூலம் பாடலாசிரியராக கால் பதித்திருக்கும் இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேரன் .., அதாவது எள்ளுப்பேரன்! நிரஞ்சன்.
16 வயதில் இருந்து பொழுதுபோக்காக கவிதை எழுதும் இவருக்கு இயலபாகவே தமிழ்ப்பற்று அதிகமாம். என்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில் இருந்தபோது 21 வயதில் சினிமா ஆர்வம் வந்துவிட்டது. ‘வானமே, உன் எல்லை என்ன’ என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டதோடு நில்லாமல், பிரபலமான பாடல்களில் தனது வரிகளை போட்டு அழகும் பார்ப்பார்.
பாரதியாருடைய பேரன் என்கிற அறிமுகத்துக்கு அவசியமில்லாமல் தனது திறமையை நம்பி சினிமா கதவை தட்டினார். கதவை திறந்தார் வெங்கட் பிரபு. எழுதிக்காட்டிய பாட்டுகள் ‘ஓகே’ ஆனது.
பாராட்டுகளால் மகிழ்ந்திருப்பதாக நெகிழும் நிரஞ்சன் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்களை எழுதுவதில்லையென்ற கொள்கையோடு, பாரதியின் வம்ச கௌரவத்தில் விழிப்பாகவும் இருக்கிறார். பாரதியின் இமேஜிக்குள் வராத தனியான கவிஞனாக தெரிவதற்கே விரும்புகிறார்.
No comments:
Post a Comment