Translate

Tuesday, 17 January 2012

புலிகள் இயக்க செயற்பாடு குறித்து அவதானம் தேவை : இலங்கைத் தூதர்களுக்கு அறிவுறுத்தல்


  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. 



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னங்களைக் கொண்டு முத்திரைகள் வெளியிட அண்மையில் சில நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. அதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கும் பிரிவினரின் செயற்பாடுகள் புலப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தூதுவர்களுக்கு அறிவித்துள்ளது.

பிரான்ஸ் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விடுதலைப் புலி முத்திரைகள் வெளியிடப்பட்டதோடு அதற்கு வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பை தெரிவித்தது

No comments:

Post a Comment