Translate

Sunday, 22 January 2012

பிரித்தானியாவின் காதல் மன்னன்!


இவர் தான் பிரித்தானியாவின் காதல் மன்னன்... அவரின் காதல் ரகசியத்தைப் பார்த்தீர்களா? ஒவ்வொரு வாரமும் தனது காதல் மனைவிக்கு பூங்கொத்து கொடுப்பாராம்.

எழுபது வருடமாக தொடர்ச்சியாக இதனைச் செய்து வருகின்றார். 89 வயதான Jack Mills என்ற கணவரே இவராவார். இவர் பிரித்தானியாவின் Cambridgeshire இல் உள்ள Yaxley பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கடந்த ஏழு தசாப்தங்களாக மனைவிக்கு இவர் வாங்கிக் கொடுத்த பூங்கொத்துக்களின் எண்ணிக்கை 3000 ஐத் தாண்டுமாம். குறித்த காதல் தம்பதிகளுக்கு மூன்று மகள்களும் ஆறு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
காதல் ரகசியம் குறித்து கருத்துத் தெரிவித்த Jack , ஒருவருக்கொருவர் அக்கறையுடன் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இன்னும் பல ஆண்டுகள் திருமண உறவு நிலைத்திருக்கும்.

No comments:

Post a Comment