Translate

Thursday 19 January 2012

மிகத் தெளிவான முறையில் அதிகாரங்கள் பகிரங்கப்பட வேண்டும்


இலங்கையில் மிகத் தெளிவான முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வலுவான அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மை இன சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் தருவாயில் கிருஸ்ணா ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களை வழங்கியுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அரசியல் சாசனத் தீர்வுத் திட்டம் மிகத் தெளிவாக தெரியக் கூடிய வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அது வரையில் இலங்கை விவகாரங்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தம்மிடம் மீள உறுதிப்படுத்தியதாக கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டம் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment