தமிழ்நாட்டின் (Triplicane Urban Cooperative Society) எனும் தமிழ்நாடு நுகர்வோர் வணிகக் கடைகளில் இருந்து சிறிலங்கா தயாரிப்பு பொருட்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவைப் புறக்கணிப்போம் எனும் முழக்கத்துடன் தமிழகத்தில் செயற்பட்டுவரும் தோழர்களின் முயற்சியின் பயனாக குறித்த கடைகளில் இருந்து சிறிலங்கா பொருட்கள் புறக்கணிக்கபடுகின்றன.
தமிழ்நாடு நுகர்வோர் வணிகக் கடைகளில் சிறிலங்கா தயாரிப்பு பொருட்கள் விற்கப்படுவததை அவதானித்த தோழிர்கள் குறித்த நுகர்வோர் மையத்தின் தலைமை அதிகாரி சக்தி சரவணன் அவர்களைச் சந்தித்திருந்தனர்.
தமிழக அரசினால் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதா தடை தீர்மானத்தை சுட்டிக்காட்சி மனுவொன்றினைக் கையளித்தனர்.
இம்மனுவினை ஏற்றுக் கொண்ட தலைமை அதிகாரி சிறிலங்கா தயாரிப்பு பொருட்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment