வடக்கு மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம் என ஊடகங்களில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார ரீதியிலான 5 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதே என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்போது 382 மில்லியன் டொலர் நிவாரணக் கடன் உதவியின் அடிப்படையில் வடக்கில் ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தம், 60 மில்லியன் டொலர் பெறுமதியான நிபந்தனைக் கடன் அடிப்படையில் தம்புள்ள நீர்வழங்கல் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
No comments:
Post a Comment