தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காத நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தாமும் பங்கேற்கப் போவதில்லை என்று ஐதேக உறுதியளித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று முன்தினம் ஐதேகவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போதே இந்தக் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்களில் ஐதேக தரப்பில் ரணில் விக்கிரமசிங்க, திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, ஜெயலத் ஜெயவர்த்தன, ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இனப்பிரச்சினைக் தீர்வு காண்பதற்காக தெரிவுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்துள்ள சிறிலங்கா அரசாங்கம் தனது தரப்பில் 19 பிரதிநிதிகளை நியமித்துள்ளது.
எனினும் எதிர்க்கட்சிகள் தரப்பில் எந்தவொரு கட்சியும் பிரதிநிதிகளின் பெயரைப் பரிந்துரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment