Translate

Sunday, 5 February 2012

சீரடிபாபாவிடம் செல்லும் கோத்தபாய !

 பாடுவது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் 
 
வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகளின் அரசியல் தலைவர்களைத் துடிக்கத் துடிக்க கொலைசெய்ய உத்தரவிட்ட கோத்தபாய ராஜபக்ஷ தற்போது இந்தியாவில் சீரடி பாபாவின் காலடியில் விழுந்து பாவங்களைக் கழுவ முயற்சித்து வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள சீரடி பாபாவின் ஸ்தலத்துக்கு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சென்ற அவருக்கு பூரண கும்ப முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் சீரடி பாபாவின் பாரிய உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் அவர் விசேட பூசையில் கலந்துகொண்டார்.


பொதுமக்களையும், மற்றும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களையும் கொலைசெய்து ஆயிரக்கணக்கில் உயிர்பலிவாங்கிய கோத்தபாய, தான் சீரடி பாபாவின் ஆத்மீக பக்தன் என மகாராஷ்டிர ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷ சீரடி பாபாவின் ஸ்தலத்துக்கு வந்திருப்பதாக அறிந்த சில ஊடகவியலாளர்கள் அங்கே சென்றவேளை அவர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் எனவும் அறியப்படுகிறது.

அதிபர் மகிந்த ராஜபக்ஷ திருப்பதி வெங்கடாச்சலபதியையும் பாபாவையும் தரிசிப்பதும், அவர் சகோதரர் சீரடி பாபாவை தரிசிப்பதுமாக பல முறை இந்தியா சென்றுவருகின்றனர். பாடுவது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று இதனைத் தான் சொல்லுவார்களோ தெரியவில்லை. 

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1716

No comments:

Post a Comment