அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக உடன்படிக்கை மீறலில் ஈடுபட்டுள்ளது,
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல் படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் அறிக்கை வெளியிடப்பட்ட பரிந்துரைகள்எதனையுமே அரசாங்கம் இன்னமும் அமுல்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் சுதந்திர தின உரைக்கு பதிலளிக்கும்வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம்17ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது முதல் பல பரிந்துரைகள் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படும் வரையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடியாத நிலையில் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக, உடன்படிக்கை மீறலில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் அமுல்படுத்தவில்லை என அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சர்வதேச ரீதியாகநடவடிக்கை எடுக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment